அறுவை சிகிச்சையை முடிவு செய்யும் முன்னர் மருத்துவர் உங்கள் நோயின் தன்மை, அறுவை சிகிச்சையின் அவசியம், அதை செய்யும்முறை, செய்வதினால் உள்ள பலன்கள், செய்யாவிடில் உள்ள கெடுதல்கள், அதன் சிக்கல்கள் போன்றவற்றின் விவரங்களை விளக்குவார்.
அவர் கூறியதற்கு மேலும் விவரம் தேவைப் பட்டால் தயக்கமில்லாமல் உங்களுடைய சந்தேகங்களைக் கேளுங்கள்.அறுவை சிகிச்சைக்குத் தகுதியுள்ளவரா?
* இதை அறிய உங்களைப் பற்றிய விவரங்கள், முன்னர் ஏதேனும் மருந்துகள் சிகிச்சை / அறுவை சிகிச்சை செய்திருந்தால் அதன் விவரங்கள் மருந்து களுக்கு ஒவ்வாமை (Allergy) போன்றவற்றைத் தெரிவிக்கவும்.
* வேறு நோய்களிருந்தாலோ, வேறு மருத்துவமனையில் சிகிச்சை செய்திருந்தாலோ அதன் முழு விவரங்களையும் தெரிவிக்கவும்.
* அறுவை சிகிச்சைக்கான தகுதியை அறிய அடிப்படை பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
* இரத்தத்தில் ஹீமோகுளோபின், யூரியா, சர்க்கரை, சிறுநீர் பரிசோதனை மற்றும் இ.சி.ஜி இதில் அடங்கும். அறுவை சிகிச்சையின் தன்மைக்கேற்ப மற்ற பரிசேதனைகளையும் செய்ய வேண்டும்.
* மயக்கம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. சுயநினைவை இழக்கச் செய்கின்ற பொதுமயக்கம் அல்லது உடலின் ஒரு பகுதியை மட்டும் மரக்கச் செய்கின்ற மயக்கம் கொடுக்கப்படும்.படுக்கையில் அனுமதி எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும் நோயாளி மன அமைதியாக இருப்பது அவசியம். அதற்கேற்ப அறுவை சிகிச்சைக்கு முன்னர் சில மணி நேரங்கள் முன்னதாகவோ அல்லது முதல் நாளோ மருத்துவமனையில் சேர்வது அவசியம்.
* அறுவை சிகிச்சைக்கு முன்னர் சுமார் 6 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவசியம். மயக்கமில்லாத அறுவை சிகிச்சைக்கு இந்த கால அளவு மாறுபடும்.
* அறுவை சிகிச்சைக்கு முன்னர் (மருந்துகளை வேறு நோய்களுக்காக சாப்பிடுவோர்) கட்டாயமாக அதை மருத்துவரிடம் கூறி எந்த மருந்தை எவ்வளவு நாள் றிறுத்துவது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
* பெரிய அறுவை சிகிச்சையின்போது இரத்த இழப்பை சரி செய்ய இரத்தத்தைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் அதனால் குடும்பத்தினர் இரத்தம் அளிக்க தேவையான ஏற்பாடுகளை முன்னரே செய்துவிட்டாலல் மன உளைச்சல் இராது.
அறுவை சிகிச்சைக்கு சம்மதம் அளித்தல்
நோயின் விவரம், அறுவை சிகிச்சையின் விவரம், அதன் அவசியம், அதன் பலன்கள், அறுவை சிகிச்சை செய்யாவிடில் சிக்கல்கள், அறுவை சிகிச்சையின் போது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிக்கல்கள், மாற்று சிகிச்சை முறைகள் முழுவதையும் அறிந்த பின்னர் அறுவை சிகிச்சைக்கு நோயாளியும் உறவினரும் சம்மதம் அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தல்
நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீட்டிலேயே வைத்து விடுவது நல்லது, அப்படி இல்லாதபோது அறுவை சிகிச்சைக்கு செல்லும்போது அவரவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்து விடுவது அவசியம்.
* அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய இடத்தில் சேவிங் செய்யப்படும்.
* எந்த வகை அறுவை சிகிச்சை என்பதை பொறுத்து, குடல் கழுவுதல் (Enema) சிறுநீரக வடி குழாய் (Catheter) போடுதல், ஆண்டிபயாடிக் மருந்துகள், டெட்டனஸ் டாக்சாய்டு, இரத்த அறைவு தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படும்.
* அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் போது, செயற்கைப் பல், காது கேட்கும் கருவி, கண் கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் மற்றும் அனைத்து ஆபரணங்களும் கழட்டி வைத்துவிட வேண்டும்.
* சிலருக்கு மனப்பதட்டத்தை குறைக்கும் மருந்துகள், இரத்தக் குழாயில் குளுக்கோஸ் திரவம், இரத்தம் போன்றவைகளும் கொடுக்கப்படும்.
அறுசை சிகிச்சை அரங்கு
* அறுவை சிகிச்சை அரங்கில் அறுவை சிகிச்சைக் குழுவினர் எல்லா தேவைகளையும் செய்வார்கள்.
* முதலில் அறுவை சிகிச்சை டேபிளில் படுக்க உதவுவர். பெயர், வயது, நோய், முதலில் எந்த வகை அறுவை சிகிச்சை போன்றவற்றை நன்கு விசாரித்த (verification) பின்னரே செயல்படுவர். நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றைஅறியும் கருவிகள் பொருத்தப்படும்.
* அறுவை சிகிச்சை முடிந்ததும் அடுத்த சில மணி நேரங்களுக்கு நாடி துடிப்பு சுவாசத்தின் செயல்பாடு, இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, சிறுநீரின் அளவு போன்றவற்றைதுள்ளியமாக கவனித்து கொண்டே இருப்பார்கள்.
* வலிக்குத் தேவையான மருந்துகளும் தேவைப் பட்டால் உறக்கத்திற்கு மருந்துகளும் கொடுக்கப்படும்.
பொதுவாக எல்லா சிகிச்சைகளைப் பற்றிய எல்லா சந்தேகங்களையும் எல்லா நேரங்களிலும் மருத்துவர்கள் குழு உங்களுக்கு தெரிவிக்கும்.