உம்பின் உறைவிடமான புற்று எப்படி வளர்ந்து கொண்டே வந்து அதை அழித்தாலும் மேன் மேலும் வளருகிறதோ அதைப் போலவே புற்று நோயும் ஓரிடத்திலிருந்து எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வளரும் தன்மையுடையது.  புற்றிலுள்ள பாம்பின் விஷம் மரணத்தை உண்டாக்குவதைப் போல புற்றுநோயும் மரணத்தை உண்டாக்குகிறது.

நமது உடலில் பல கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. ஆரம்பத்தில் ஒரு செல் மட்டும் பிறந்து பிரிந்து பல்வேறு வகை செல்களை உண்டாக்கி அவைகளை தனித்துவப்படுத்தி ஒவ்வொரு உறுப்பையும் உண்டாக்குகிறது.
நம் உடலில் முதிர்ந்த செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றி அதை புதுப்பித்தலும் முறையான கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டே இருக்கின்றன.  சில காரணங்களினால் இந்தக் கட்டுப்பாடு மாறி புதிய வகையான செல்கள் உருவாகி அவை மிக வேகமாக பெருகி உறுப்புகளில் கட்டியாக உண்டாகிறது. இதையே புற்று நோய் என்கிறோம்.
புற்று நோயின் காரணங்கள் என்னென்ன?
பல புற்று நோய்களில் அதன் காரணம் இன்னும் புதிராகவே இருக்கிறது. சில நோய்களுக்கு பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
1. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை கலந்த உருண்டையை வாயில் அடக்கி வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் உண்டாகிறது.
2. ஆண்கள், ஆண்குறியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிடில் அதிலுள்ள ஸ்மெக்மா என்ற அழுக்கு ஆண் உறுப்பில் புற்றுநோயை  உண்டாக்குகிறது.
3. சொத்தையுள்ள கடலை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் எப்ளாடக்ஸின் என்ற விஷப் பொருள் உள்ளது. இது நாளடைவில் ஈரல் புற்று நோயை உண்டாக்குகிறது.
4. சரியான உணவு பழக்கமில்லாதவர்களுக்கு குடல் மற்றும் ஆசனவாய் புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
5. புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். சிகரெட் புகையில் ஆயிரக்கணக்கான கரிப்பொருள்கள் உள்ளன. அவற்றில் நிக்கொட்டின், கரிமிலவாயு, பினால், பீனதெப்தலீன், இணடோ கார்பசோல், ஹைட்ரோ சயனிக் அமிலம், அசிடால்டிஹைடு போன்றவை புற்றுநோயின் காரணிகள் ஆகும்.
6. உணவில் கலக்கிற இராசயனப் பொருட்களில் பல புற்றுநோயின் காரணிகள் இருக்கின்றன.
7. கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி கதிர்கள் இரத்தப் புற்றுநோய்களை உண்டாக்குகின்றன.
8. ஹெபடைடிஸ்.பி.வைரல் மற்றும் ஹெச்.ஐ.வி வைரஸ் புற்றுநோய்களை உண்டாக்குகின்றன.
புற்றுநோய்களின் அறிகுறிகள் என்னென்ன?
நீண்ட நாட்களுக்கு வாயிலோ நாக்கிலோ வெள்ளையான தடிப்பு இருந்தால் வாய் புற்று நோய் வரும்.
இரத்தக் கசிவு – மார்பிலிருந்தால் மார்பு புற்று நோய் உண்டாகும்.
மாதவிடாய் நின்றபின் இரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப்படுதல்  இருந்தால் கருப்பை புற்றுநோய் அறிகுறியாகும்.
மூலமில்லாத இரத்தக் கசிவு, மலங்கழிக்கும் போது இருந்தால் குடல் புற்றுநோய் அறிகுறியாகும்.
நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண், தோல் புற்று நோயின் அறிகுறியாகும்.
உணவை விழுங்கும் போது ஏற்படும் அடைப்பு உணவுக் குழாய் புற்று நோயின் அறிகுறியாகும்.
திடீர் குரல் மாற்றம் – மூச்சுக் குழாயின் புற்று நோயாக இருக்கலாம்.
மச்சம் பெரிதானால் புற்று நோயாகலாம்.
எந்த நோயும் இல்லாமல் உடல் எடை குறைதல், பசியின்மை, அஜீரணம் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
தொடர்ந்து நீடித்த, நாளுக்கு நாள் அதிகமாகிற, மருந்துக்கு கட்டுப்படாத தலைவலி மூளைப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்
சிகிச்சைக்கு குறையாமல் தொடருகிற காமாலை நோய் பித்தப்பை மற்றும் கணையத்தின் புற்றுநோய்களின் அறிகுறியாகும்.
திடீரென பெரிதாகின்ற, கரையாத நிணநீர் கட்டி புற்று நோயாக இருக்கலாம்.
இருமல், மூச்சிறைத்தல், கோழையில் இரத்தம் போன்றவை நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம்.
வயிற்றுவலி, இரத்தவாந்தி, சாப்பிட இயலாமை, வாந்தியில் இரத்தம் போன்றவை இரைப்பை புற்றுநோயாக இருக்கலாம்.
வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாறி மாறி வருதல் வயிற்று வலி, வாந்தி போன்றவை பெருங்குடல் புற்று நோயாக இருக்கலாம்.
வலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, வாந்தி, கண்பார்வை குறைவு, கைகால்கள் செயலிழத்தல், போன்றவை மூளை புற்று நோயாக இருக்கலாம்.
புற்று நோய் பரவும் விதம் எப்படி?
1. ஒரு உறுப்பில் புற்று நோய் உருவானதும், அருகிலுள்ள நல்ல செல்களைப் பாதித்து, அதன் அருகிலுள்ள இரத்தக்குழாய், நரம்பு மற்றும் தசைகளைப் பாதித்து அவ்வுறுப்பை  செயல்படாமல் தடுக்கிறது.
2. இரத்த குழாய் வழியாக பரவி நுரையீரல், கல்லீரல், மூளை, எலும்பு போன்ற முக்கிய பகுதிகளுக்குப் பரவுகின்றன.
புற்று நோயை கண்டறியும் பரிசோதனைகள் என்னென்ன?
பிணிக்கூறு ஆய்வுமுறை
இதன்மூலம் புற்றுநோய் உள்ள உறுப்பின் சிறு பகுதியை ஊசிமூலம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் எடுத்து அதன் செல் மாற்றங்களை அறிந்து நோயை அறியலாம்.
பாப் பரிசோதனை
இதன் மூலம் கருப்பை வாயிலிருந்து வெளி வரும் கசிவை எடுத்து பரிசோதித்து கருப்பை புற்று நோயை மிக ஆரம்பத்திலேயே அறிந்து பூரண குணப்படுத்தலாம்.
எக்ஸ்ரே பரிசோதனை
நுரையீரல் மற்றும் எலும்பு புற்று நோய்களை அறிய உதவும். மார்பக எக்ஸ்ரே  மார்பக புற்று நோயை கண்டறிய உதவும். பேரியம் எக்ஸ்ரே மற்றும் ஸ்கோபி பரிசோதனை மூலம் உணவுப்பாதை,   இரைப்பை, குடல் புற்று நோயைக் காணமுடியும்.
இரத்த பரிசோதனை
இரத்த புற்று நோய்களை அறிய பயன்படும்,
நுண் எதிரொலி வரைபடம்
வயிற்றில் கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல், பித்தப்பை, கணையம், கர்ப்பப்பை போன்றவற்றின் புற்று நோய்களைக் கண்டறிய உதவும்,
சி.டிஸ்கேன்
மிகச்சிறிய அளவில் உள்ள புற்றுநோய்களை குறிப்பாக மூளை, முதுகெலும்பு போன்றவற்றில் கண்டறிய இப்பரிசோதனை பயன்படும்.
அகநோக்கி ஆய்வு முறை
உடலின் எந்த துவாரம் வழியாகவும் இக்கருவியை செலுத்தி அங்குள்ள புற்றுநோய்களை  நேரிடையாக காணலாம்.  அதன் மூலம் பிணிக்கூறு ஆய்வுமுறை மற்றும் சில சிகிக்சைகளையும்  செய்யலாம். தொண்டை, இரைப்பை,  உணவு குழாய், மலக்குடல், பித்தப்பை, நுரையீரல், சிறுநீர்ப்பை போன்றவற்றில் இவை பயன்படுத்தப்படுகிறது.
ஜீன் பரிசோதனை
நவீன மருத்துவத்தில் செல்களில் உள்ள குறிப்பிட்ட ஜீன்களில், ஒரு குறிப்பிட்ட ஜீன்களின் மாற்றத்தை வைத்து எதிர்காலத்தில் எந்த உறுப்பில் புற்று நோய் வரலாம் என்பதை கணிக்க முடியும், அந்த உறுப்பில் புற்றுநோய் வரும் காலத்திற்கு முன்பே அவ்வுறுப்பை  அகற்றினால் அதிலிருந்து தப்பிக்க முடியும். இப்பரிசோதனை  இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புற்று நோய்களின் சிகிச்சை முறைகள்
அறுவை சிகிச்சை முறை
நோய் பாதித்த உறுப்பை அறவே அகற்றவும், அல்லது பரவிவிட்ட நிலையில் தற்காலிக சிகிச்சைக் காகவும் அறுவை சிகிச்சை பயன்படுகின்றது.
கதிரியக்க சிகிச்சை முறை
கதிரியக்கத்தின் மூலம் புற்று நோய் செல்களின் மையக் கருவை அழித்து அதன் வளர்ச்சியை தடுத்து குணப்படுத்துகின்றன.
வேதியியல் சிகிச்சை முறை
புற்று நோய் பரவிய நிலையில் இம்மருந்துகள் புற்றுநோயின் வீரியத்தை கட்டுப்படுத்த பயன் படுகின்றன.
ஹார்மோன் சிகிச்சை முறை
சில ஹார்மோன்களால் சில புற்று நோய்கள் பெருகுகின்றன. அதைக் குறைத்தால் புற்று நோய் வளர்ச்சியும் குறைகின்றன.
உதாரணம்: தைராய்டு புற்று நோய், மார்புபுற்று நோய், சினைப்புற்று நோய், ஆண்விதைப் புற்று நோய் போன்றவை.
நோயெதிர்ப்பு சிகிச்சை முறை
இன்டர்லீயூக்கின் போன்றபொருட்களை பயன்படுத்தி நோயை எதிர்க்கும் சக்திகளை உருவாக்கி புற்றுநோயைக் குறைக்கப் பயன் படுகின்றன.
புற்றுநோயை பற்றிய கருத்துக்கள்.
1. புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல. புற்று நோயுள்ளவர்களை பராமரிப்பதால் யாருக்கும் பரவுவதில்லை.
2. ஆரம்பகால புற்றுநோயை எளிதில் அறியமுடியும். முழுவதும் குணமாக்க              முடியும்.
3. பல்வேறு புற்று நோய்களுக்குக் காரணங்கள் இன்னும் தெரியாமலேயே  இருக்கிறது.
4. புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உணவு பழக்கமின்மை, செயற்கை உணவு பொருட்கள் போன்றவைகளைத் தவிர்த்தல் பலநோய்களை தடுக்கும் வழிகளாகும்.
5. இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்றுநோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

யாருக்கு அதிக வாய்ப்புகள்?

* குடும்பத்தில் மார்பக புற்று ஏற்பட்டிருந்தால்
* முன்னரே மார்பக கட்டி ஏற்பட்டிருந்தால்
* குழந்தை பெறாதிருந்தால்
* பாலூட்டாதிருந்தால்
* 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெற்றால்
* புகைபிடித்தால்
*    மாதவிடாய் நின்றபிறகு மார்பில் கட்டி வந்தால்
– இவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்புகள் அதிகம்
அறிகுறிகள்
* பெண்கள் தங்களுடைய மார்பகத்தை தாங்களே கண்ணாடி முன் நின்று பார்த்தால், அதில்
– வழக்கத்திற்கு மாறான வீக்கம் இருந்தால்
– கட்டியானது வலி எடுத்தால்
– மார்பு காம்பில் திரவ கசிவு இருந்தால்
–        மார்பகத் தோல் ஆரஞ்சு தோல் போல் குழி விழுந்து காணப்பட்டால்
– மார்பகம் கனமாக இருந்தால்
–        மார்பக கட்டியுடன் அக்குளில் நெறிகட்டு   இருந்தால்
அது மார்பக புற்று நோய் எனலாம்.
2. சினைப்பை புற்றுநோய்
இதன் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. பொதுவாக வயிற்றுப் பகுதியில் அல்ராசவுண்ட் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப் படுகின்றன.
நன்கு வளர்ந்த கட்டிகளால் அடி வயிற்றில் வலி, வீக்கம், தொடர் வாந்தி, பசியின்மை, சிறுநீர் செல்லுவதில் சிக்கல்கள் போன்றஅறிகுறிகள் வெளிப்படும்.
இரத்தத்தில் இஅ 125 என்றஇரசாயன பொருள் அதிகமிருந்தால் அதை புற்றுநோய் என உறுதி செய்யலாம். ஸ்கேன் பரிசோதனையில் நீர்க் கட்டிக்குள் கெட்டியான சதை தெரிந்தால் அது புற்றுநோயாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
3. கருப்பை வாய் புற்று நோய்
இளம் வயதிலேயே உடலுறவு மற்றும் தாய்மை யடைவோர், சுகாதாரமில்லாத உடலுறவு, பலருடன் உடலுறவு – போன்ற பெண்களுக்கு இந்நோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம்.
பெண்ணுறுப்பில் வெள்ளை கசிவு, அதில் துர் வாசனை, உடலுறவின் பின்னர் இரத்தம் வெளியாகுதல், மாதவிடாய் நின்றபின்னரும் உதிரப் போக்கு, சிறுநீர்த் தொல்லைகள் போன்றவை இதன் அறிகுறிகள்.
40 வயதான பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாப் – ஸ்மியர் பரிசோதனை செய்து கொண்டால் இப்புற்று நோயை வருமுன் தடுக்கலாம்.
4. கருப்பை புற்றுநோய்
சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நோய், அதிக கொழுப்பு நோய் உள்ள பெண்களுக்கே இப்புற்று நோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம்.
கடுமையான உதிரப் போக்கு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் கருப்பையில் வீக்கம் போன்றவற்றின் மூலம் இதை ஊகிக்கலாம்.
கருப்பையின் சதையை எடுத்து பயாப்சி பரிசோதனை செய்து இதை உறுதிப்படுத்தலாம்.
5 உணவுக் குழாய் புற்று நோய்
உணவு விழுங்கும்போது தடை ஏற்படுதல், குரலில் மாற்றம், பசியின்மை, உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்படும். பெரும் பாலோருக்கு அறிகுறிகள் தெரியும் போதே அருகிலுள்ள உறுப்புகளில் புற்று பரவி இருப்பதால் ஆரம்பத்திலேயே எண்டாஸ்கோபி மூலம் பரிசோதனை செய்து சதையை எடுத்து மைக்ரோஸ் கோபியில் பார்த்தால் புற்று நோயைக் கண்டறிய முடியும்.
இல்லாவிடில் ஆரம்பத்தில் கெட்டியான உணவுகளை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டு நாளடைவில் நீர் ஆகாரம் உட்கொள்வதிலும் சிக்கல் வந்துவிடும். பின்னர் உமிழ்நீரைக்கூட விழுங்க முடியாது. அதனால் உமிழ்நீர் சுவாசப் பாதைக்குள்  சென்று மூச்சடைப்பு ஏற்பட்டு மரணம் உண்டாகும்.
6. இரைப்பை புற்றுநோய்
அ வகை இரத்த வகையினர், குடும்பத்தினருக்கு இரைப்பை புற்றுநோய் உள்ளவர் மற்றும் மது அருந்துவோருக்கு இந்நோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம்.
அஜீரணம், வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், உடல் எடைகுறைவு, பசியின்மை, வாந்தியில் இரத்தம், மலத்தில் இரத்தம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
கல்லீரலில் பரவினால் காமாலை, எலும்பில் பரவினால் எலும்பு முறிவு, தோலில் பரவினால் கட்டி போன்ற சிக்கல்கள் உண்டாகும்.
7. மலக்குடல் புற்றுநோய்
பெருங்குடலின் புற்றுநோய் உள்ள இடத்திற்கேற்ப அறிகுறிகள் வேறுபடும். வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், இரண்டும் மாறி மாறி உண்டாகுதல், மலத்துடன் இரத்தம் வெளியாகுதல், உடல்சோர்வு, உடல் எடைகுறைவு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
காய்கறி, கீரைகள், பழங்கள் போன்றநார்ச்சத்து உணவுகளை சாப்பிடாதவர்களுக்கும் மிகவும் பட்டை தீட்டிய உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடு வோருக்கும் மாமிச உணவு உண்போருக்கும் இப்புற்று நோய் அதிகமாக ஏற்படும்.
8. கணைய புற்றுநோய்
* புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுடைய ஆண்களுக்கும் சர்க்கரை நோயினருக்கும் இந்நோய் அதிகம்.
* வயிற்றுவலியானது வயிற்றின் நடுவில் வலிக்கும். முன்புறமாக குனிந்தால் குறைந்தது போல இருக்கும்.
* காமாலை, உடல் எடை குறைவு, உணவுப் பாதையில் இரத்தக் கசிவு, அரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்

கல்லீரல் புற்றுநோய்
* தொடர்ந்து மதுப்பழக்கம், ஹெபடைடிஸ் பி பாதிப்பு, கல்லீரல் சுருக்க நோயான சிர்ரோசில் ஏபிளோடாக்சின் என்ற காளான் நஞ்சு போன்றவற்றால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
* வயிற்றில் சுமை போன்றஉணர்வு, காமாலை, வயிறு உப்புதல், பசியின்மை, உடல் அசதி, எடை குறைவு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
* கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், உணவுப் பாதையில் இரத்தக் கசிவு போன்றவை காணப்படும்.
* பிற உறுப்புகளின் நோயிலிருந்து (மார்பகம் , தைராய்டு, கருப்பை, சினைப்பை, குடல், நுரையீரல், இரைப்பை, கணையம்) கல்லீரலுக்குப் புற்றுநோய் பரவும்.
10. சிறுநீரக புற்றுநோய்
* சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற ரண்ப்ம்’ள் ற்ன்ம்ர்ன்ழ் சுமார் 5 வயதில் தெரியும்.
* காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுக்கட்டி, சிறுநீரில் இரத்தம், குமட்டல், வாந்தி, இரத்தக் கொதிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
* பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தை களுக்கு அதிகமாக ஏற்படும்.
* பெரியவர்களுக்கு சிறுநீரில் இரத்தம் வெளிப் படும். கட்டியால் வயிற்றுவலி, சிறுநீரக செயலிழப்பு போன்றஅறிகுறிகளும் ஏற்படும்.
* புற்று பரவினால் கல்லீரல், நுரையீரல், எலும்பு, மூளை போன்ற உறுப்புகளும் பாதிப்படையும்.
11 சிறுநீர்ப்பை புற்றுநோய்
* ரப்பர் மற்றும் இராசாயனத் தொழிற்சாலை, பரிசோதனை நிலையம், இரும்பாலை போன்ற பணிகளில் இருப்போர்.
* நாப்தலின், பென்சிடின் போன்றரசாயன பொருட்களைக் கையாள்வோர்.
* புகை பிடிப்போர்.
*குடும்பத்தில் சிறுநீர்ப்பை புற்றுநோய் பாதிப்புள்ளோர்.
ஆகியோருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம்.
அறிகுறிகள்
–    சிறுநீர் கழிக்கும் போது இரத்தம்     வெளியேறுதல்
– சிறுநீர்ப்பையில் கிருமி தாக்குதல்
– சிறுநீர்க் கழிக்கும்போது எரிச்சல்.
– அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு.
– சிறுநீர்க் கழிக்கும் உணர்வு ஏற்பட்டும் சிறுநீர்  வெளியேறாமை.
– அடி வயிற்றில் வலி
– பசியின்மை, உடல் மெலிதல் போன்றவை சிறு நீர்ப் பை புற்றுநோயின் அறிகுறிகள்.
12. புராஸ்டேட் புற்றுநோய்
* ஆண்களுக்கு சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள விந்து திரவத்தை சுரக்கும் இச்சுரப்பி, 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வளர்ந்து பெரிதாகும்.
* அதனால் சிறுநீர் பாதை அடைத்து சிறுநீர் வெளியேற்றம் பாதிக்கும்.
* அதில் புற்றுநோய் ஏற்பட்டால், சிறுநீரில் இரத்த வெளியாகும். எலும்புக்கு பரவிய புற்றுநோய் கடுமையான இடுப்புவலியை ஏற்படுத்தும்.
* கட்டியை அகற்றுவதுடன், விதைகளையும் அகற்றுதல் மற்றும் ஹார்மோன் சிகிச்சை இதற்கு பலனளிக்கும்.
13. பியோகுரோமோ சைட்டோமோ
சிறுநீரகத்தின் மேலே உள்ள அட்ரீனல் சுரப்பியில் வளரும் கட்டி.
அதிக அளவு அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்களை சுரந்து இரத்தக் கொதிப்பை உண்டாக்கும்.
மேலும் கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் எடை குறைவு, படபடப்பு, கைகள் சில்லென ஆகுதல், மனப்பதட்டம், பார்வை குறைவு, உடல் வியர்த்தல்,  மயக்கம் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
சிறுநீரில் ஹார்மோன் அளவு அதிகமுள்ளதை பரிசோதித்து இதை உறுதிபடுத்தலாம்.
இக்கட்டியினால் ஏற்படுகின்ற கடுமையான இரத்தக் கொதிப்பே உயிருக்கு ஆபத்தானது.
14.இரத்தப் புற்றுநோய்
இரத்தத்தில் சிவப்பணு, வெள்ளணு, தட்டை அணு என மூன்று வகை செல்கள் உள்ளன. இவை எலும்பு மஞ்ஜையில் உற்பத்தியாகின்றன. இரத்தப் புற்றணுக்களில் முக்கியமானது வெள்ளணுக்களின் புற்றுநோய். (இதில் வெள்ளணுக்கள் முழு வளர்ச்சி யடையாமலும் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படும்).
இதன் அறிகுறிகள்: இரத்தக் கசிவு ஏற்படுதல் (உணவுப் பாதையில், வாயில், மூக்கில், மலத்தில், இருமலில், தோலில்) கிருமிகளின் பாதிப்பால் புண் மற்றும் காய்ச்சல் தொல்லைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் போன்றவை.
15. நிணநீர் கட்டிகளின் புற்றுநோய் (கஹ்ம்ல்ட்ர்ம்ஹ)
நிணநீர் கட்டிகள் நம் உடலின் போர் வீரர்களான லிம்போசைட் என்ற வெள்ளணுக்களின் உறைவிடம். நோய்க்கிருமிகள் தாக்கும் போது அந்தந்த பகுதிகளிலுள்ள நிணநீர் கட்டுகள் வீங்கி விடும்.
இக்கட்டிகளின் புற்றுநோயில் வலி எதுவும் இல்லாமல் ஆங்காங்கே உள்ள நிணநீர் கட்டுகள் வீங்கிவிடும். வலி இருக்காது. அத்துடன் கல்லீரல் மண்ணீரல் வீக்கமும் உண்டாகும்.
இக்கட்டிகளின் அழுத்தத்திற்கேற்ப வயிற்றிலும் மார்பிலும் பாதிப்புகள் வெளிப்படும்.
16. குரல்வளை புற்றுநோய்
* புகைபிடிப்போர் மற்றும் மது அருந்து வோருக்கு இப்புற்றுநோய் அதிகமாக ஏற்படும்.
* குரல் மாற்றம், உணவை விழுங்குவதில் சிரமம், வலி, மூச்சு விடுவதில் தடை, தொண்டையில் நெறிகட்டு போன்ற அறிகுறிகள் உண்டாகும்,
* அறுவை சிகிச்சை மூலம் குரல்வளையை எடுத்து விடுவதுதான் இதன் சிகிச்சை முறை. அதனால் சைகையின் மூலமே பிறருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
17. நுரையீரல் புற்றுநோய்
* புகை பிடிப்போர், புகைபிடிப்போருடன் இருப்போர், கல்நார் மற்றும் தூசுபடிந்த சூழலில் வேலை போன்றோர் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்படுவர்.
* கடுமையான இடைவிடாத இருமல், சளி, சளியில் இரத்தம், நெஞ்சு வலி, வீசிங் போன்றவற்றுடன் உடல் எடை குறைவு, சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
* புகைப்பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தை விட்டுவிட்டால் அப்போதிருந்து அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் குறைந்துவிடும்.
18. புளுரா (நுரையீரல் சவ்வு) புற்றுநோய்
* நுரையீரலின் சவ்வான புளூராவில் புற்று நோய் ஏற்பட்டால் இதய சவ்வான பெரிகார்டியம், வயிற்று சவ்வான பெரிட்டோனியம் போன்ற வற்றிலும் பாதிப்படையும்.
* ஆஸ்பெஸ்டோஸ் (கல்நார் அட்டை) தொழில் செய்வோருக்கு இப்புற்றுநோயின் வாய்ப்பு அதிகம்.
* நெஞ்சு வலி, இருமல், மூச்சுத்திணறல், மூச்சு விட முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

19. சிறுவர்களின் எலும்பு புற்றுநோய்
(Ewing’s Sarcoma)
10-20 வயதிலுள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற கடுமையான எலும்பு புற்றுநோய். கைகால் எலும்பு, இடுப்பு எலும்பு இவைகளே பாதிப்படையும்.
கடுமையான வலியுடன் எலும்பில் வீக்கம், கடுமையான காய்ச்சல், போன்றவை மட்டுமே அறிகுறியாக வெளிப்படும்.
ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் அறுவை சிகிச்சை, ஊடுகதிர் சிகிச்சை, கீமோ சிகிச்சை ஆகியவற்றின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற சார்கோமா வகை எலும்பு புற்றுநோய் கடுமையாக பரவும் வகையைச் சார்ந்தது.
20. எய்ட்ஸ் புற்றுநோய்-கபோசி சார்கோமா
எயிட்ஸ் நோயாளியின் கால், கை, உணவுப் பாதை, சுவாசப் பாதைகளில் இப்புற்று நோய் ஏற்படும்.
ஊதா வண்ணத்தில் கட்டி உண்டாகி அதில் இரத்தக் கசிவு ஏற்படும். இரத்த சோகை உண்டாகும்.
எய்ட்ஸ் நோயினருக்கு இப்புற்று நோய் ஏற்பட்டால் நோய் மிகவும் உச்சக்கட்டத்தில் உள்ளதெனலாம்.
21. மச்ச புற்றுநோய் (Melanoma)
* வெளிறிய நிறத்தினர் மற்றும் சூரிய ஒளியில் வேலை செய்வோருக்கே இப்புற்றுநோய் அதிகம்.
* இயல்பான மச்சம் பெரிதாகி அதில் இரத்தக்கசிவு ஏற்படும். அத்துடன் கல்லீரல் மற்றும் நிணநீர் கட்டிகளின் வீக்கமும் உண்டாகும்.
* திடீரென மச்சம் பெரிதானால், அதைச் சுற்றியுள்ள தோல் புடைத்தால் இப்புற்றுநோயாக இருக்கலாம்.
22. தோல் புற்றுநோய்
முகத்தில் ஆறாத புண். மூக்கு, கண், உதடு ஓரங்களில் புண்போல தோன்றி பெரிதாகும். (Rodent ulcer)
புண் காய்ந்தது போல தோன்றும். பிறகு இரத்தக் கசிவு ஏற்படும்.
* சிலருக்கு சூரிய ஒளி படுகின்றதோல் பகுதியில் சிறிய, கெட்டியான கட்டி ஏற்பட்டு புண் உண்டாகும். ஆறாமல் பரவிக் கொண்டே இருக்கும் (Squamous cell carcinoma).
* அதன் ஒரு பகுதியை எடுத்து பயாப்சி பரிசோதனை செய்தால் புற்றுநோயை உறுதிப் படுத்தலாம்.
* சரியான அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாகும்.
23. மூளையில் புற்றுநோய்
மூளையில் பல்வேறு வகைகளில் புற்று நோய் உண்டாகலாம். மூளையின் நரம்பு செல்கள், மூளையை மூடியுள்ள உறைகள், பிட்யூட்டரி சுரப்பி போன்றவைகளிலிருந்து புற்றுநோய் உண்டாகலாம்.
ஆனால் பெரும்பாலும் பிற உறுப்புகளி லிருந்து (மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய்) மூளைக்குப் பரவுகிற இரண்டாம் வகை புற்றுநோயே அதிகமகும்.
மூளையில் கட்டியோ அல்லது புற்றுநோயோ உண்டானால் ஏற்படுகின்ற முக்கிய அறிகுறிகள்.
தலைவலி, குமட்டல் , வாந்தி, பார்வை மங்குதல், பேச்சுக் குழறல், இரட்டைப் பார்வை படிப்பதில் எழுதுவதில் சிக்கல், நடை முறைகளில் மாற்றங்கள். உடலின் ஒரு பாதியில் மரமரப்பு மற்றும் பலவீனம், வலிப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
தலைவலிதான் முக்கிய அறிகுறி. இத்தலைவலி தலை முழுவதுமே இருக்கும். அதிகாலையில் அதிகமாக வலிக்கும். இருமுதல், மூச்சை அடக்குதல், தலையை அசைத்தல் போன்றவைகளின் போது இத்தலைவலி அதிகமாகும். இத்துடன் தூக்கமின்மையும் ஏற்படும்.
தொடர்ந்து வருகிற தலைவலி.
நீண்ட நேரம் வருகிற தலைவலி,
நாளுக்குநாள் அதிகமாகும் தலைவலி.
மருந்துகளுக்கு கட்டுப்படாத தலை வலி-இப்படி ஒருவருக்கு இருந்தால். அது மூளைக் கட்டியின் பாதிப்பாக இருக்கலாம்.
மேலும் மூளையில் எந்த இடத்தில் பாதிப்படைந்துள்ளதோ அதற்கேற்ற பிறஅறிகுறிகள் உண்டாகும்.
சி.டி ஸ்கேன் மூலம் மூளையில் கட்டியை ஆரம்பத்திலேயே அறியலாம். அறுவைசிகிச்சை கதிரியக்க சிகிச்சை, கீமோதிரபி போன்ற சிகிச்சை முறைகளை புற்றுநோயின் தன்மைக்கேற்ப செய்தல் அவசியம்.

சீலா 53 வயது, படுக்கையிலிருந்து எழுந்து கழிவறை செல்லும்போது கால் வழுக்கியது. கீழே விழாமல் சுவரைப் பிடித்துவிட்டார். ஆனாலும் இடுப்பெலும்பு உடைந்துவிட்டது. சாதாரண விபத்துதான். பெரிய பாதிப்பு. அறுவை சிகிச்சை செய்து எலும்புகள் இணைக்கப்பட்டது.
எலும்பு முறிவு எளிதில் ஏற்பட்டது ஏன்?
எலும்பின் உறுதி குறைந்து அதன் அடர்த்தி குறைவாகி (ர்ள்ற்ங்ர்ல்ர்ழ்ர்ள்ண்ள்) விட்டதால் சிறு விபத்திலும்  எலும்பு உடைந்துவிடும்.
யார் யாருக்கு இந்த பிரச்சனை வரலாம்?
குறிப்பாக மைனோபாஸ் அடைந்த பெண்கள் எலும்பு மெலிவால் பாதிக்கப்படுவர். மாதவிலக்கு நின்றவுடன் இரத்தத்தில்  உள்ள ஈஸ்ட்ரஜன் என்றஹார்மோன் குறைந்து விடுவதால் எலும்பில்  கால்சியம் அளவு குறையும். அதைத் தொடர்ந்து எலும்பு மெலிதல் ஏற்படும்.
எந்தெந்த எலும்புகள் உடையும்?
இடுப்பு எலும்பு, மணிக்கட்டு, முதுகெலும்பு முதலானவை.
எலும்பு மெலிவின் அறிகுறிகள் என்னென்ன?
பெரும்பாலோருக்கு எந்த அறிகுறியும் இராது. உடலில் ஆங்காங்கே வலி இருக்கலாம். சிலருக்கு முதுகெலும்பு உடைந்து கடுமையான முதுகு வலி வரலாம். பெரும்பாலோருக்கு முதல் அறிகுறியே எலும்பு முறிவாக இருக்கும்.

எலும்பு மெலிவின் காரணங்கள் என்னென்ன?

*     நாற்பது வயதிற்கு மேற்பட்டோர்
*        நாற்பது வயதிற்குள் மெனோபாஸ் அடைந்தவர்கள்
*     உடலுழைப்பு இல்லாதவர்கள்.
*     மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள்
*     மது அருந்துவோர்
*     கால்சியம் குறைவு
*        ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து     சாப்பிடுவோர்.
போன்றோருக்கு எலும்பு மெலிந்து எலும்பு உடையும் நிலை ஏற்படும்.
இதைக் கண்டுபிடிப்பது எப்படி?
நாற்பது வயதைத் தாண்டியவர்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை (ஆர்ய்ங் ஙண்ய்ங்ழ்ஹப் ஈங்ய்ள்ண்ற்ஹ் ஆஙஈ) யைச் செய்தால் எலும்பு மெலிவை கண்டுபிடிக்க முடியும்.
எலும்பு மெலிவை தடுப்பது எப்படி?
* பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை மூலம் (ஈஸ்ட்ரஜன், கால்சிடோனின்) எலும்பு மெலிவை சரிப்படுத்தலாம்.
* உணவு முறையில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ இருக்க வேண்டும்.
* நாள்தோறும் உடற்பயிற்சி (வேகமாக நடத்தல், ஏரோபிக்ஸ், டென்னிஸ்)
* மது மற்றும் புகை பிடித்தலைத் தவிர்த்தல்.
வைட்டமின் ‘டி’ எப்படி கிடைக்கிறது :-
* வைட்டமின் டி-யில் இருவகைகள் ஈ2, ஈ3 என்பன.
ஈ2 – தாவரங்களின் மூலம் (பழங்கள், காய்கறி, கீரைகள் மூலம்) கிடைக்கிறது.
வைட்டமின் ஈ3 – சூரிய ஒளியின் மூலம் தோலில் இரசாயன மாற்றத்தால் கிடைக்கிறது.
வைட்டமின் ஈ யின் பயன்கள்
* எலும்புகளின் வலிமை
* எலும்பு வளர்ச்சி
* தசைகளுக்கு உறுதி
* இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்
* எலும்பு மூட்டுகள் உறுதி
* தோலுக்கு எதிர்ப்பாற்றல்
* சிறுநீரகத்தின் செயல்பாடுகளைச் சீராக்குதல்
போன்ற பல்வேறு பலன்கள் வைட்டமின் ஈ மூலம் கிடைக்கிறது.
வைட்டமின் ‘ஈ’ கிடைக்கும் உணவுகள் :
பால், மீன், முட்டை, எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் – போன்றவற்றில் அதிக வைட்டமின்  ஈ கிடைக்கிறது.
வைட்டமின் ஈ குறைவின் விளைவுகள் :
எலும்பு, பல், நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் வயது வந்தவர்களுக்கு எளிதில் வயோதிகம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு தலை எலும்பு வளர்ச்சி குறைந்து தலையின் முன்பாகம் பெரிதாக இருக்கும். கைகால் மூட்டுகள் புடைத்து இருக்கும். நெஞ்சு எலும்பு கூடாக இருக்கும். முதுகு கூன் விழும்.