1.நம்மை மிகவும் நேசிக்கும் நபர்களை வெகு சாமான்யமாக சகஜமாக எடுத்துக் கொள்வது மனித இயல்பு. நமது இயல்பு இவ்வாறுதான் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த இயற்கையான இயல்பை நாம எதிர்த்து நிற்க வேண்டும், இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். நமது குடும்பத்தினர் பால் ஒரு செழுமையான ஆரோக்கியமான நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உயிர் வாழ்வதற்கு இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு மிக நெருங்கியவர்களை அழைத்து நீங்கள் அவர்களை எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த தொலைபேசியை நோக்கி கை நீட்டுவீர்கள்.
ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். இங்கேயே இப்போதே தொலைபேசியில் பேசுங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அவர்களை எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமோ நண்பர் அல்லது தோழி இவர்களிடம் அவர்களைப் பற்றி என்ன உணர்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். இதைச் செய்ததற்காக நீங்கள் ஒருபோதும் வருந்த மாட்டீர்கள்.

2.எதையாவது செய்யும் பொழுது அதில் சந்தோஷம் இல்லையென்றால் அதைச் செய்வதால் என்ன பயன்? வாழ்க்கை மிகக் குறுகியது. எப்போதுமே சோகமாக இருந்த வண்ணம் அதை வீணடிப்பது சரியல்ல, இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் இல்லையா?
பணியிடத்தில் மகிழ்வுடன் நன்றாகச் சிரித்தபடி இருந்தால் இணைந்து பணி புரிதல் உருவாக்கும் சக்தி மற்றும் பணியின் பால் ஈடுபாடு ஆகியவை நன்கு வளர்வதற் கான வாய்ப்புகள் உள்ளன. ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் நிறுவனம் தொடர்ந்து ஒன்றாகவே இருக்கும்.
ஏனெனில் மக்கள் மகிழ்ச்சியுடன் தொழில் புரிபவர்களுடன் தமது வியாபாரத் தொடர்புகளை வைத்துக் கொள்வதை வெகுவாக விரும்புகிறார்கள்.
குழந்தைகளுடன் நான் எப்போதும் கோமாளித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவதால் வாழ்க்கை மேலானதாக ஆகிறது, அது மேலும் களிப்பும் கேளிக்கையும் கொண்டதாகிறது.

3.ஒரு விருந்தாளி என்பவர் இறைவனுக்குச் சமமாவார்” எவரேனும் எங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்ளை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நாங்கள் நடத்துவோம், எங்களுக்கு உணவு இல்லாமல் போனால்கூட அவர்கள் நன்றாக வயிறாரச் சாப்பிடுமாறு பார்த்துக் கொள்வோம். இதுதான் எங்களது கலாச்சாரம், இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது, உங்கள் வாழ்வில் உங்கள் நிறுவனத்தில் விருந்தினர்களைக் கடவுளர்களைப் போல நடத்துகிறீர்களா? உங்களை பார்க்க வருகிற ஒவ்வொருவம் உங்களது வாழ்க்கைப் பயணத்தில் குறுக்கிடும் ஒவ்வொருவரும் ஒரு கடவுளைப் போல நடத்தப்பட்டால் உங்கள் சொந்த வாழ்க்கை எவ்வாறு இருக்கும். உங்கள் வாடிக்கையாளர்களை மரியாதையுடனும் அன்புடனும் நீங்கள் நடத்தினால் உங்களது தொழில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? நீங்கள் உலகத்தரம் வாய்ந்தவராக இருப்பீர்கள்! இன்னும் அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். மேலும் நிறைய மகிழ்ச்சியடைவீர்கள்! மேன்மை மகத்துவத்தை எட்டுவீர்கள்”.

4.எல்லாப் புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டு மக்கள் முதலில் எள்ளி நகையாடுகிறார்கள். உலகம் உருண்டையாக இருக்கிறது என்று கொலம்பஸ் கூறியபொழுது அவரைப் பார்த்துச் சிரித்தார்கள், ஒரு மனிதனால் வானில் பறக்க முடியும் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறிய பொழுது ரைட் சகோதரர்களைக் கண்டும் சிரித்தார்கள், உங்கள் தொழிலில், துறையில் தலைவராக முன்னின்று நடத்திச் செல்ல வேண்டுமா? வித்தியாசமாக இருங்கள். உங்கள் தொலைநோக்குக் காட்சிக்கு உண்மையுள்ளவராக இருங்கள், இன்னும் பெரிய கனவாகக் காணுங்கள். சாதாரணமானவராக இருக்காதீர்கள்.

5.சவால்கள் நல்லவை, அவற்றின் மூலம் நாம் வளர்கிறோம். ஆபத்துக்கு இடையேதான் நாம் மிகுந்த உயிர்த்துடிப்புடன் தோன்றுகிறோம். கம்பி மீது நடக்கும் வித்தகரான பாப்பா வாலெண்டா “வாழ்க்கை என்பதே கம்பி மீது தான் வாழப்படுகிறது. மீதமுள்ள நேரமெல்லாம் வெறுமனே காத்திருத்தல் மட்டுமே வாழ்க்கை யானது. பெரிய புரட்சியாளர்களைச் சோதிக்கிறது”. “நான் தோல்வியுற்றால் அதைப் பற்றி வருத்தப்பட மாட்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் வருத்தப்படக்கூடிய ஒரே விஷயம் முயன்று பார்க்காமல் விட்டு விடுவதுதான் என்றும் எனக்குத் தெரியும்” என்றார் ஒரு அறிஞர்.
6.தலைமைத்துவம் என்பது உள்ளே துவங்குவது நிறுவனம் சார்ந்த தலைமைத்துவம் என்பது தனி நபர் தலைமைத் துவத்தில்தான் துவங்குகிறது. நீங்கள் சிறப்பாக உணரவில்லையென்றால் உங்களால் வேலையில் சிறப்பாக செயலாற்ற முடியாது, நீங்கள் உங்களைப் பற்றியே சிறப்பாக உணர்ந்தால் ஒழிய மற்றொருவர் தன்னைப் பற்றியே சிறப்பாக உணருமாறு செய்ய உங்களால் முடியாது, உங்களிடம் சக்தியே இல்லை என்றால் ஒரு நேர்மறைச் சக்தியின் ஆதாரமாக உங்களால் இருக்க முடியாது, வெற்றியின் கதவுகள் வெளிப்புறமாகத் தான் திறக்கின்றன,

7.விமானத்தில் பயணிக்கும் போது பயண உதவியாளர் கூறுவதைக் கவனித்துக் கேளுங்கள். ‘வேறு எவருக்கேனும் உதவ முயலுவதற்கு முன்னர் பிராணவாயு முகமூடியை முதலில் உங்கள் வாயின் மீது பொருத்திக் கொள்ளுங்கள்” என்பார் இதன் தாத்பரியம் வெகு தெளிவானது. உங்களால் சுவாசிக்க முடியவில்லையென்றால் உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு உங்களால் ஒரு பயனும் கிடையாது. தனிநபர் தலைமைத்துவம் பற்றி விளக்குவதற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும், உங்களையே கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள். நல்ல உடலமைப்பைப் பெறுங்கள், சிறப்பான தொழில் ரீதியான நூல்களையும் உற்காகமூட்டும் சுயசரிதை களையும் வாசியுங்கள். திட்டமிட்டு உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள், ஒரு பயிற்சியாளரின் உதவியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களது அன்புக்குரியவர்களுடன் மிகச்சிறப்பான வகையில் நேரத்தைச் செலவிடுங்கள். இயற்கையோடு கலந்துற வாடுங்கள். வெற்றியை விரட்டிச் செல்லும் அதே நேரத்தில் வாழ்க்கையை ரசித்து அனுபவியுங்கள்.

8.உலகிற்கு இன்னும் அதிகமான மாவீரர்கள் தேவை. அந்த மாவீரர்களோ மிகச் சிறந்ததைத் தேடிக் கண்டுபிடிப்பதிலே ‘தம்முடைய’ நாட்களைச் செலவிட்டுக் கொண்டுள்ளனர், சிரமங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றுக்குள் அவர்கள் சிறப்பைக் காண்கிறார்கள், பிறரிடம் உள்ள மேன்மைக் குணங்களை அவர்கள் கண்டு கொள்கிறார்கள். தமக்குள்ளேயே உள்ள மிகச் சிறப்பான குணங்களை அவர்கள் தோண்டியெடுக் கிறார்கள். தமது மேன்மைத் தன்மையை அவர்கள் தம்முடையது என்று உரிமையோடு எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாக அவர்கள் தமது மிகச்சிறப்பான வாழ்க்கையைப் பெறுகிறார்கள். மிகச்சிறிய வெற்றிகள். லாபங்கள் காலப் போக்கில் இராட்சத விளைவுகளை உருவாக்குகின்றன, வாழ்க்கையானது நாம் வெற்றி பெறவேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பங்கை ஆற்றுவதுதான். எனவே மேன்மைக் குணத்தை உங்களுடையது என்று உரிமை கொண்டாடுங்கள், இந்தக் காயும் கதிரவனுக்கு கீழே உங்களுடையது என்று ஓர் இடத்தில் ஒரு முனையை அடித்து ஆழமாக இறக்கி நிலை நிறுத்துங்கள், உங்களது இறந்த காலத்தின் கைதியாக இருப்பதை நிறுத்தி விட்டு உங்கள் எதிர்காலத்தின் சிற்பியாக ஆகுங்கள். இதை மறந்து விடாதீர்கள். யாராக இருக்க வேண்டும் என்று எப்போதுமே கனவு கண்டு வந்துள்ளீர்களோ அவராக நீங்கள் ஆவதற்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை.

9.உங்களுக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறை யினரின் மனங்களிலும் இதயங்களிலும் தொடர்ந்து வாழ்ந்திருப்பது என்பது மரணத்தை ஏமாற்றும் வித்தையாகும், தலைமை தாங்கிச் செல்வதிலும் தனித்துவத்தை வெளிக் காட்டுவதிலும் ஒரு வேறுபாட்டைக் காட்டிப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவது இறவாத் தன்மையைப் பெறும் வழியாகும், மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பது பணியில் ஒரு மாவீரனாக இருப்பதன் வாயிலாகவோ அல்லது வீட்டில் ஒரு மகத்தான தந்தையாகவோ தாயாகவோ இருப்பதன் வாயிலாகவோ அல்லது உங்கள் சமுதாயத்தில் ஒரு சிறந்த தலைவனாக இருப்பதன் வாயிலாகவோ என்றென்றும் வாழ்ந்திருப்பதாகும்.

10.மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். வாழ்க்கையைப் பற்றி நிறைய அக்கறை காட்டுங்கள். இன்று என்ன பங்களிப்பை அளிக்கப் போகிறீர்கள் என்பது பற்றி. இன்று என்ன உருவாக்கப் போகிறீர்கள் என்பது பற்றி. இன்று யாரைப் போற்றிக் கொண்டாடப் போகிறீர்கள் என்பது பற்றி. இன்று எந்த அச்சத்தை வெற்றி கொள்ளப் போகிறீர்கள் என்பது பற்றி. இன்று எந்த சமூகச்சீர்கேட்டை பழுது பார்க்கப் போகிறீர்கள் என்பது பற்றி. இன்று எந்தத் தவறைச் சரி செய்யப் போகிறீர்கள் என்பது பற்றி. “நாம் ஒவ்வொருவருமே செத்து விடுவோம். ஆனால் நம்மில் வெகு சிலரே உண்மையில் வாழ்கிறோம்”

-ராபின் ஷர்மா