ஐம்பது சத குழந்தைகளுக்கு பிறந்த முதல் வாரத்தில் லேசான மஞ்சள் நிறமிருக்கும். தாயிடம் பெற்றஇரத்த சிவப்பணுக்கள், பிறந்தவுடன் சிதைவடைவதாலும் கல்லீரலின் குறைவான செயல்பட்டாலும் இது ஏற்படுகிறது,

பெரும்பாலும் இவை தாமாகச் சரியாகிவிடும் ஆனால்

1. இரத்தத்தில் பிலிரூபின் 10 மி.கிக்கு மேலிருந்தால்

2. தட் இரத்தவகையில் தந்தை பாசிடிவ்வாகவும், தாய் நெகடிவ்வாகவும் குழந்தை பாசிடிவ் வாகவும் இருந்தால்,

3. காமாலை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால்,

4. பித்தநீர் பாதையில் சிக்கல் ஏற்பட்டால் – சிக்கலின் அறிகுறிகளாகும்.

அக்குழந்தை சுறுசுறுப்பின்றி சரியாக சாப்பிட முடியாமல் போகும். மேலும் கல்லீரலும் மூளையும் பாதிக்கப்படும். பொதுவாக பச்சை குழந்தைகளுக்கு ஓரிரு வாரங்கள் காமாலை இருப்பது இயல்பே.