நவீன மருத்துவம் வாழ்க்கைத் தரத்தை மிகவும் உயர்த்தி விட்டது. யாரும் மறுக்க முடியாது. அதே சமயம் நமது பழக்க வழக்கங்களும், உணவுகளும் உடல் நலத்தில் அதிக பங்கு வகிப்பதை மறக்கக்கூடாது.
குழந்தைகளுக்கு பால் சிறந்த உணவு. குழந்தைகளுக்கு தாய்ப்பாலே மிகவும் சத்தானது. நோயிலிருந்து காப்பது. அதுவே பெரியவர்களுக்கு அதிக கொழுப்பை உண்டாக்குவது. கொழுப்பை நீக்கிய பாலையே பெரியவர்கள் அருந்தலாம்.
உணவுகளில் பழங்கள், கீரைகள், காய்கறிகள் மிக அவசியமானவை. உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொடுப்பது. முக்கியமாக மலச்சிக்கலை குணப்படுத்தி மூல நோயைத் தவிர்ப்பது. மேலும் உடலை பருக்காமல் செய்ய உதவுவது இவ்வுணவுகள்தான்.
மாமிச உணவுகளில் மீன் மற்றும் கடல் உணவுகள் ஜீரண மண்டலத்தில் எளிதாக சீரணிக்கப்படுகின்றன. பிற மாமிச உணவுகளால் கொழுப்பு சத்து அதிகமாகுதல், அதிக அளவில் சீரண நோய்கள் ஏற்படுதல் போன்ற சிக்கல்கள் அதிகம்.
வலி மாத்திரைகளை அதிகமாக சாப்பிடுவதை விட முறையான ஓய்வு, உடற்பயிற்சிகள், யோக பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் உடல் வலிகளை வெகுவாக குறைக்க முடியும்.
வைட்டமின் மாத்திரைகளை கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஏதாவது குறைபாடு உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் பழங்கள், கீரைகளை அதிகமாக சாப்பிட்டாலே போதுமானது.
நாள்தோறும் யோக பயிற்சி செய்தால் உடலின் எல்லா உறுப்புகளும் சமநிலையில் செயல்படும்.