1. எஞ்சைனா என்பது இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் குறையும் போது ஏற்படுகின்ற நெஞ்சுவலி.. இந்த வலி வந்தால் அப்படியே அமர்ந்து ஓய்வெடுத்தால் நெஞ்சுவலி குறையும். நெஞ்சுவலியின் போது இ.சி.ஜி பார்த்தால் மாற்றம் இருக்கும், மற்ற சமயத்தில் மாற்றம் இருக்காது.
2. இன்பார்க்சன் என்றால் கடுமையான நெஞ்சு வலி ஏற்படும். உடல் வியர்க்கும். நெஞ்சுவலியானது யாரோ அழுத்துவதுமாதிரி, எரியற மாதிரி, பிசையற மாதிரி இருக்கும். தொண்டை, முதுகுபுறம், இடதுகை போன்ற இடங்களிலும் வலி இருக்கும்.
இது இதயத்தசைகளுக்கு முற்றிலும் ஆக்ஸிஜன் கிடைக்காததால் அந்த தசைகள் உயிர் இழந்து விட்டதன் விளைவு.
3. மாறுபட்ட ஏஞ்சைனா என்பது, ஏஞ்சைனா, இன்பார்க்சன் இரண்டுக்கும் இடைப் பட்டதாகும். இதில் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு அது நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். இ.சி.ஜி பரிசோதனையில் மாற்றங்கள் சரியாக இருக்காது.