மனித இனத்தின் சிறப்பு பகுத்தறிவு. மனிதனை உயர்த்தும் பண்புகளில் முக்கியமானது சிரிப்பு.
சிரித்தால் சொர்க்கம்.
துக்கப்பட்டால் நரகம்.
மனிதனை தாழ்த்தும் குணங்களில் முக்கியமானது கவலை.
நீடித்த கவலையே துக்கம். நவீன மனிதனின் கொடிய நோய் துக்கம்தான்.
கவலைகளுக்குக் காரணம் ஆசைகள். ஆசைகளின் அளவிற்கேற்ப கவலைகள் வளரும்.
மனிதனின் வேதனைகளுக்கு முக்கிய காரணம் ஈகோ.
அறிவை மழுங்கச் செய்யும் ஆற்றல் படைத்தது ஈகோ. அது அழிந்தால் உண்மையான விழிப்புணர்வு பிறக்கும். ஈகோவை களைந்த மனிதன் கடவுள் நிலையை அடைகிறான்.
எண்ணங்கள் – ஹார்மோன்கள் – நரம்புகளின் செயல்பாடுகள் இம்மூன்றும் தொடர் சங்கிலி.
நல்ல எண்ணங்களுக்கேற்ப நல்ல ஹார்மோன்கள் சுரக்கும். அதன் விளைவாக நரம்புகள் உற்சாகமடைகின்றன.