டாக்டர் நான் காலையில் எழுந்திருக்கும் பொழுதுதெல்லாம் தலைச்சுற்றல் வருகிறது.
‘தலைச்சுற்றல் எவ்வளவு நேரம் இருக்கிறது’ -டாக்டர்
சுமார் ஒரு மணி நேரம் இருக்கிறது – நோயாளி.
சரி. இனிமேல் ஒருமணி நேரம் கழித்து எழுந்திரியுங்கள் – டாக்டர்.
சற்று வேடிக்கையான வியாதி இந்த தலைச் சுற்றல். ரத்தக் கொதிப்பு அதிகமானாலும் தலை சுற்றும். இரத்தக் கொதிப்பு குறைவானாலும் தலைசுற்றும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் சர்க்கரை அளவு குறைந்தாலும் தலை சுற்றும். அதிகமானாலும் தலை சுற்றும். அதிகம் தூங்கினாலும் தலை சுற்றும். தூங்கவில்லை யென்றாலும் தலை சுற்றும்.
நன்து இரண்டு காதுகளிலும் 3 மிகச் சிறிய எலும்புகள், நாம் தலையையோ உடலையோ பல்வேறு விதமாக ஆட்டும் பொழுது நம் உடலை சமநிலை செய்ய உதவுகின்றன. படுக்கையிலிருந்து எழுந்து நிற்கும் பொழுது ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் வரலாம். மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் தலை சுற்றல் வந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். இவற்றை சற்று மாற்றுவார். படுக்கையில் இருந்து எழும்பொழுது முதலில் நன்றாக முழிக்கவும். பின்பு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்திரிக்கவும். இவ்வாறு செய்தால் தலை சுற்றல் குறையும்.