பரிசோதனைகள்: உள் பரிசோதனைகளான கருப்பை, வயிறு, உள்ளுறுப்புகள், கருப்பையின் வாய், பாப் சோதனை மற்றும் மார்பக பரிசோதனை செய்ய வேண்டும்.
கருப்பையின் உள் தசையின் தடிமனையும் மற்றும் கருப்பையினுள்ளே வேண்டாத வளர்ச்சி ஏதாவது இருந்தால் அதை அல்ட்ரா சோனாகிராபி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஹிஸ்ட்ரோஸ்கோபி முறையில் மெல்லிய குழாயை கருப்பையின் வாய் வழியாக உள்ளே செலுத்தி கருப்பையின் உட்புறத்தை பரிசோதனை செய்வார்கள்.
டி & சி முறையில் கருப்பையின் உள்ளேயிருந்து சிறிதளவு திசுவை சுரண்டியெடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாக சோதனை செய்வார்கள்.

சிகிச்சைகள்
கருப்பையின் உட்புறம் மெல்லியதாக இருந்தால், ஈஸ்ட்ரோஜன் (ஹார்மோன்தெரபி) உதவும். ஒருவேளை கருப்பையின் உட்புறத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் ப்ரோஜெஸ்ட்ரான் (ஹார்மோன்தெரபி) உதவும்.
கருப்பையினுள்ளே பாலிப்ஸ் அல்லது சிறிய நார்க்கட்டி போன்ற வேறு ஏதாவது வளர்ச்சி இருந்து, அதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டால் ஹிஸ்ட்ரோஸ்கோபி அல்லது டி & சி முறையில் சிகிச்சை அளிக்கலாம். எண்டோமெட்டிரியல் ஹைபர் பிளாசியா இருந்தால் மருந்து, மாத்திரைகளோ அல்லது அறுவை சிகிச்சையோ தேவைப்படும். புற்றுநோய் வந்தால் கருப்பையை அகற்றுதல் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் தேவைப்படும்.