மலட்டுத்தன்மைக்கு அடிப்படையாக செய்ய வேண்டிய பரிசோதனைகள்.
ஆண் விந்தணு பரிசோதனை, பெண்களுக்கு ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட், ஹிஸ்ட்ரோ சால்பிங்கோகிராம் பரிசோதனை போன்றவை.

ஆண்களிடம் ஏற்படும் பிரச்சினைகள் :
ஆண் விந்தணுவின் அளவையும், தரத்தையும் பல்வேறு காரணங்கள் பாதிக்கலாம். ஆணின் விந்தணுக்கு எதிராக பெண்ணின் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி, சிறுநீரகப் பகுதியில் ஏற்படும் தோல் தொற்று, மம்ப்ஸ் என்கிற வைரஸ் தொற்று, வேரிகோசீல் என்கிற விரையில் இரத்தக் குழாய் சுற்றி இருக்கின்ற நிலை, சரியான இடத்தில் அமையாத விதைப்பை மற்றும் மரபுவழிக் காரணங்கள். ஆண்களிடம் சுய இன்பப் பழக்கம் விந்தணுவை பாதிப்பதில்லை. கருத்தரிப்பைத் தடுக்காது.
பெண்களிடம் பொதுவாக காணப்படுகின்ற கருப்பைக் கட்டியினால் கருத்தரிப்பு பாதிக்கப்படும். இந்தக் கட்டிகள் கருப்பையில் பல்வேறு இடங்களில் வரக்கூடும். கட்டி ஏற்படுகிறஇடத்தைப் பொறுத்து பிரச்சினைகள் மாறுபடலாம்.

விந்துவை செயற்கை முறையில் கருப்பைக்குள் செலுத்துதல் எப்போது?
* கர்ப்பப்பையின் வாய் குறுகலாக அதன் கழுத்துப் பகுதியில் உருவாகும் சளிபோன்றசவ்வுப் பொருளின் தன்மை தரமற்றதாக இருக்கும் போது.
* உயிர் அணுக்களின் எதிர்ப்பொருள் கொண்ட பொருள் பெண்ணின் இரத்தத்தில் காணப்படுதல்.
* கர்ப்பபையின் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலை இருக்கும் போது.
* ஆண்களின் உடற் கூறில் கோளாறு ஏற்பட்டு மலட்டுத்தன்மை அடைய நேரிடும்போது
* விந்துவின் வீரியம் குறையும்போது.
* காரணம் தெரியாமல் நீண்ட நாட்களாக கருத்தரிக்க இயலாமை நேரிடும்போது.
செயற்கை முறையில் விந்துவை வெளிப்படச் செய்து, அதிலிருந்து வீரியமுள்ள விந்துக்களைப் பிரித்து அதை மனைவியின் கர்ப்பப்பையில் இரண்டு மணி நேரத்திற்குள் சிறிய துளை உள்ள பிளாஸ்டிக் குழாய் மூலம் செலுத்துவது.

சோதனைக்குழாய் குழந்தை:
பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவிலுள்ள உயிரணுவும் கருப்பைக்கு வெளியே 48-72 மணி நேரம் சோதனைக் கூடத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் வைக்கப்பட்டு அவை இணைந்த பின் கருவினை, பெண்ணின் கருப்பையினுள் செலுத்துவதே சோதனைக்குழாய் முறை.