1. நம் உடலானது பல கோடி செல்களால் உருவாகின்றன. இந்த செல்கள் தொடர்ந்து அப்புறப் படுத்தப்பட்டும், புதிய செல்கள் உற்பத்தியாகிக் கொண்டும் இருக்கின்றன. இதில் செல்லானது கட்டுப் பாட்டை இழந்து சம்பந்தமில்லாமல், தேவைக்கு அதிகமாக வளரும் நிலையே புற்றுநோய்.
2. மரபு வழியில் ஜீன்களில் நடக்கின்ற கோளாறுகள்தான் மார்பகப் புற்றுநோய்க்கு அடிப்படைக் காரணம்.
3. வயது அதிகமாகும் போது மார்பகப் புற்று நோய் வருகிற வாய்ப்பும் அதிகம்.
4. நிறைய குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்புகள் குறைவு.
5. நீண்ட காலம் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்புகளைக் குறைக்கிறது.
6. மிக இளம் வயதில் பருவமடைதல், மிக தாமதமாக மெனோபாஸ் அடைதல் ஆகிய இரண்டிலும் புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம்.
7. சில காரணங்களுக்காக கொடுக்கப்படுகிற ஹார்மோன் மாத்திரைகள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
8. அதிக எடையுள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிற வாய்ப்பு சற்று அதிகம்.
9. குடும்ப வழி உறவினர்களுக்கு மார்பு புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் இந்நோய் வருகின்ற வாய்ப்பு சற்று அதிகம்.
10. வயது அதிகமான பின்னர் குழந்தை பெற்றுக் கொள்கிறபெண்களுக்கு சற்று வாய்ப்பு அதிகம்.
11. குடிப்பழக்கம் உள்ள பெண்களுக்கு புற்றுநோய் அதிகம்.
12. மார்பக புற்றுநோய் ஒரு வலி இல்லாத கட்டியாகத்தான் மார்பகத்தில் தொடங்குகிறது. இது தவிர மார்பகத்தின் அளவு, வடிவம் திடீரென மாறுவது போல் இருந்தால் மார்பகத்தின் தோலின் மேல் குழிகள் தோன்ற ஆரம்பித்தால், மென்மையாக இருந்த மார்பு திடீரென கடினமாக மாறி விட்டது போல இருந்தால், மார்பக காம்பு உட்புறம் திரும்பி விட்டிருந்தால், மார்புக்காம்பின் கீழ் கட்டி அல்லது கடினத் தன்மை உருவாகி இருந்தால், மார்புக் காம்பில் இருந்து இரத்தம் தோய்ந்த நீர்மம் வெளியேறினால் அக்குள் பகுதியில் கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால் அது புற்றுநோயாக இருக்கலாம்.
13. கருப்பையின் மாத சுழற்சியின் போது (மாதவிடாய்) மார்பகத்தில் கட்டி உண்டாகலாம். மாத சுழற்சிக்கு ஏற்றாற்போல் தோன்றி மறையும். பொதுவாக இந்த வகை கட்டிகள் பாதிப்பு இல்லாதவை. மீண்டும் மீண்டும் வந்தால் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.
14. சில சமயங்களில் சாதாரண கட்டிகள் புற்றுநோயாக மாறுகின்றன. ஆகவே வந்திருப்பது சாதாரண கட்டிதானா என்பதை உறுதி செய்து கொள்வது மிக மிக முக்கியம்.
15. பொதுவாக இரண்டு முக்கிய இடங்களில் மார்பகப் புற்றுநோய் ஆரம்பமாகும். ஒன்று மார்பகங்களில் இருக்கும் பால் உருவாக்கும் திசுக்கள். இரண்டாவது உருவாகின்ற பாலை மார்பு காம்புக்கு கொண்டு செல்லும் குழாய்கள்.

16. மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க வழிகள்
‘மேமோகிராம்’ என்கிற பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் பயாப்சி பரிசோதனைகள்.
17. மார்பக திசுக்களை படம் எடுக்க உதவும் குறைந்த அளவு எக்ஸ்ரே என்பதுதான் மெமோ கிராம். ஒவ்வொரு மார்பகத்தையும் வெவ்வேறு கோணங்களில் படமெடுத்து புற்று நோயைக் கண்டறிய இந்த பரிசோதனைகள் உதவும்.
18. ஊசஅஇ என்பது ஊண்ய்ங் சங்ங்க்ப்ங் அள்ல்ண்ழ்ஹற்ண்ர்ய் இஹ்ற்ர்ப்ர்ஞ்ஹ் இதுவும் மிக எளிமையான, எளிதில் செய்து கொண்டு வீட்டிற்குப் போய் விடுகிற பரிசோதனை தான். சிறிய ஊசியால் மார்பகக் கட்டியில் உறிஞ்சி அதைப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். புற்று நோய் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்து விடும்.
மார்பக புற்றுநோயின் நிலைகள்:
ஆரம்பக் கட்டம் :
புற்றுநோய் முழுவதுமாக பால் குழாய்க ளிலேயே இருப்பது. சுற்றி இருக்கிற மார்பகத் திசுக்களுக்குக் கூட பரவி இருக்காது.
முதல் கட்டம் :
புற்று நோய்க் கட்டி அளவு 2 செ.மீக்கு குறைவாக இருக்கும். அக்குள் பகுதியில் இருக்கும் நிணநீர்ச் சுரப்பிகளில் பாதிப்பு இருக்காது.
இரண்டாம் கட்டம் :
புற்றுநோய்க் கட்டியின் அளவு 2 செ.மீ முதல் 5 செ.மீ வரை இருக்கும். அல்லது அக்குள் பகுதியின் நிணநீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டிருக்கும்.
மூன்றாம் கட்டம்:
புற்று நோய்க் கட்டி 5 செ.மீ அளவை விட அதிகமாக இருக்கும். சுற்றி இருக்கும் தசைகள் மற்றும் தோல் பாதிக்கப்பட்டிருக்கலாம். நிணநீர்ச் சுரப்பிகள் பாதிக்கப்பட்டிருக்கும்.
நான்காம் கட்டம் :
புற்றுநோய்க் கட்டி எந்த அளவிலும் இருக்கலாம். நிணநீர்ச் சுரப்பிகள் பாதிக்கப் பட்டிருக்கும். உடலின் வேறு பகுதிக்கும் புற்று நோய் பரவி இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்:
அறுவை சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு கட்டியை மட்டும் அகற்றுதல், மார்பகத்தை அகற்றுதல் மற்றும் அக்குள் பகுதியில் இருக்கிற பாதிக்கப் பட்ட நிணநீர்ச் சுரப்பிகளையும் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு கதிர்வீச்சு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை மற்றும் கீமோதிரபி தேவைப்படலாம்.

பல்வேறு முறைகள்
புற்று நோய்க் கட்டியை மட்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது.
முழு மார்பகத்தையும் புற்றுநோய்க் கட்டியுடன் சேர்த்து அகற்றுவது.
மார்பகத்தையும் அக்குள் நிணநீர் கட்டி களையும் அகற்றுதல்
கதிர்வீச்சு சிகிச்சை: மூன்று முதல் ஆறு வாரங்களுக்கு இந்தச் சிகிச்சை கொடுக்கப்படும் (தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடம்)

மார்பகத்தை நீக்கியவர்களுக்கு மாற்று சிகிச்சை :
சில அறுவை சிகிச்சை மூலம் ஏற்கெனவே இருந்த மார்பக வடிவத்தை பெறவழி இருக்கிறது. முதுகுதசை அல்லது தோல் மற்றும் கொழுப்பு அல்லது வயிற்றுத் தசைகளை எடுத்து நீக்கப்பட்ட இடத்தில் வைத்து மறுபடியும் திரும்ப மார்பக வடிவைப் பெறலாம்.

கீமோதெரபி சிகிச்சையின் சிக்கல்கள்:
சிலருக்கு முடி கொட்டலாம். எத்தனை நாட்களில் கொட்டியதோ அத்தனை நாட்களுக்குள் முளைத்துவிடும். மருந்து கொடுக்கும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை (சில நாட்களுக்கு) ஏற்படலாம். இரத்த செல்களின் எண்ணிக்கை குறைவு ஏற்படலாம். இதெல்லாம் தாமாக குணமாகிவிடும்
சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ந்து பரிசோதனைகள்: முதல் இரண்டு வருடங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு, வருடத்திற்கு ஒரு முறைபரிசோதிக்க வேண்டும்.
மார்பகப் புற்றுநோயில் ஹார்மோன் தெரபி: சிலருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைக் கட்டுப் படுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கலாம். இதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் டாமாக்ஸிபன் என்பதும் ஒன்று.
கதிர்வீச்சு சிகிச்சையால் வாந்தி வருவது போன்ற உணர்வு, வாந்தி, சோர்வான நிலை ஏற்படலாம். இவை பொதுவான பாதிப்புகள். முடி உதிர்வதும் ஏற்படும். மருத்துவரின் உதவியுடன் இந்த பக்க விளைவுகளை எளிதில் சமாளிக்கலாம்.

மார்பகங்களைச் சுயமாக பரிசோதித்துக் கொள்ளும் முறை:
குளிக்கும் போது தொட்டுப் பார்ப்பது.
கண்ணாடி முன் நின்று கைகள் கீழே இருக்க, கைகள் மேலே இருக்க, கைகள் இடுப்பில் வைத்திருக்கப் பார்ப்பது.
நேராக நின்று விரல்களால் மார்பகங்களை அழுத்துவது, பின் வட்ட வடிவமான முறையில் விரல்களால் மார்பகத்தைப் பரிசோதித்துக் கொண்டே வருவது.
மார்புக் காம்புகளை லேசாக அழுத்தி அதிலிருந்து நீர்மம் ஏதாவது வருகிறதா என்று கவனிப்பது போன்றவை மூலம் மார்பகப் புற்று நோயை ஆரம்பக் கட்டத்திலேயே அறியலாம்.
மார்பக அமைப்பும் பிற கட்டிகளும்:
பால் சுரப்பிகளும் பால் எடுத்து வரும் குழல்களும் மீதி இடத்தில் கொழுப்புமாக நிரம்பி இருக்கிறமென்மைப் பகுதிதான் மார்பகம்.
மார்புக் காம்பைச் சுற்றிலும் சற்றே புடைத்தது போல் உள்ள கறுப்புப் பகுதி ‘ஏரியோலா’ ஆகும்.
மாதவிலக்குக்கு முன், மார்பில் ரத்தம் அதிக மாகப் பாயும். இந்த சமயங்களிலும் குழந்தைக்குப் பால் தரும்போதும் காம்பு விரிந்திருக்கும். மற்ற நேரங்களில் சுருங்கி விடும்.
பெண்ணுக்கு வயதாக ஆக அவளது மார்பகத் தோற்றமும் வடிவமும் மாறிக் கொண்டே வரும். மாதவிலக்கு நின்ற பிறகு ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் இந்த சுரப்பிகளுக்குத் தொடர்பு உள்ள திசுக்கள் குறைகின்றன. இதனால் மார்பகத் தோல் தளர்வடைகிறது.
பொதுவாக எட்டு முதல் பத்து வயதிலிருந்து மார்பகங்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். காம்பு பகுதி தனிந்து, சற்றே தூக்கலாக தெரியும். அடுத்த கட்டமாக காம்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள கறுமைப் பகுதி அனைத்தும் வளர்ச்சி அடைந்து முழுமை பெறும்.
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டு விதமான ஹார்மோன்களின் தூண்டுதலால் தான் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.
சிலருக்கு மார்புகள் முழுமையான வளர்ச்சி பெற்றபிறகும். இரண்டுக்குமிடையே லேசான வித்தியாசம் தெரியலாம். நாளடைவில் சரியாகிவிடும்.
சில குழந்தைகளின் மார்பிலிருந்து நீர் போன்ற திரவக் கசிவு, அல்லது புடைத்த மார்பு இருக்கலாம். இதற்கு காரணம் தாயின் கருவில் குழந்தை இருக்கும் போது தாயின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தொப்புள்கொடி வழியாகச் சென்று குழந்தை உடம்பில் சேர்ந்துவிடுகிறது. அந்த ஹார்மோன் தொப்புள்கொடி வழியாகச் சென்று குழந்தை உடம்பில் சேர்ந்துவிடுகிறது. அந்த ஹார்மோன்களின் அளவு அதிகரித்தால் இவ்வாறு கசியும். சில சமயம் மார்பில் இல்லாமல் பிறப்புறுப்பின் வழியாக சிவப்பு கருஞ்சிவப்பு தீட்டுக்கூட படலாம். நாலைந்து நாட்களுக்கு இந்த கசிவு நின்றுவிடும்.
மார்புக்கு அடியில் வலியும், புண், எரிச்சலும் ஏற்படுவது மார்புகள் சரிந்து வயிற்றுப் பகுதியோடு உராய்வதால்தான் மார்பு அளவுக்கு தகுந்த பிராவைத் தேர்ந்தெடுத்து அணிந்து எப்போதும் மார்புக்கு கீழே சுத்தமாக, உலர்வாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால் எரிச்சல் புண் ஏற்படாது.
சிலருக்கு மாதவிலக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மார்பில் வலி ஏற்படும். மார்பில் வலி, மார்பு கனத்தல் போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பு. குறிப்பிட்ட ஒரு ஹார்மோன் சுரப்பு அப்போது அதிகரிப்பதால் வரும் பிரச்சனைகள். மாத விலக்கு முடிந்து அதன் சுரப்பு குறைந்ததும் வலியும் தானாக மறைந்துவிடும். மார்பகத்துக்குச் சரியான உள்ளாடை அணிவது வலியைக் குறைக்கும்.
மார்பு வளர்ச்சி இல்லாமல், பருவமடை யாமலும் இருந்தால், மருத்துவப் பரிசோதனை அவசியம். குரோமோசோம்கள், கருப்பை, பிட்யூட்டரி, தைராய்டு போன்றவற்றில் குறை பாடுகள் இருந்தால் இப்படி நேரலாம். ஆரம்பத்திலேயே கவனித்தால் மருந்து மாத்திரைகள் மூலமே சரிப்படுத்தி விட வாய்ப்பு அதிகம்.
குழந்தை பெறாத திருமணமாகாத பெண் களுக்கு மார்பிலிருந்து திரவக் கசிவு ஏற்படுவதற்கு ‘கேலக்டோரியா’ என்று பெயர். சில வகை மருந்துகள், தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், மூளைக்குள் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் சிறு கட்டிகள் உருவாகுதல் ஆகியவை முக்கிய காரணங்கள். குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது தூக்க மாத்திரைகள் சாப்பிடும் பெண்களுக்கு காம்பில் இருந்து ஒருவித திரவம் சுரக்கலாம்.
மார்பில் கசிகின்ற திரவம் சிவப்பு, மர நிறங்களில் இருந்தால் அது புற்றின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குழந்தை பிறந்த பிறகு மார்பிலிருந்து பால் வருவதுதான் இயல்பு. வேறு எந்த வகையான கசிவு மார்பில் ஏற்பட்டாலும் அது எங்கோ, எதிலோ ஏற்பட்ட தவறுதான்.
மார்புக் காம்புகள் உள் இழுத்து இருப்பதால் பால் கொடுக்க முடியாத போது என்ன செய்யலாம்? குழந்தைக்கு பாலூட்டும் நேரத்தில்தான் பிரச்சனை வரும். குழந்தையால் காம்பை உறிஞ்ச முடியாது. அப்போது அதற்கென்று உள்ள சிரிஞ்சு மூலம் நிப்பிளை வெளியே கொண்டு வரலாம்.

கர்ப்பத்தின் போது மார்பில் மாற்றம்
கர்ப்ப காலத்தில் மார்பின் அளவு அதிகரிக்கும். மென்மையடையும், மார்பு கனமாகவும் லேசான வலியுடனும் இருக்கும். சிலருக்கு மார்பி லிருந்து நீர் போன்ற திரவம் சுரப்பதற்கு காரணமும் இந்த அதிக அளவு ஹார்மோன் சுரப்புதான்.
பிரசவத்திற்கு முன்னர் பால் சுரந்தால் சரியா?
பிரசவத்திற்கு முன்பு பால் சுரந்தால் எக்காரணமும் கொண்டும் அசட்டையாக விட்டு விடக்கூடாது. நஞ்சின் செயல்திறன் குறைவதன் அறிகுறிதான் இந்த பால் போன்ற திரவக் கசிவு. உடனடி சிகிச்சை தேவை.
கர்ப்ப காலத்தில் மார்பை பராமரிப்பது எப்படி?
பிரா இறுக்கமாக இருக்கக்கூடாது. சிலருக்கு காம்பில் வெடிப்பு ஏற்படலாம். அப்போது சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் குழந்தை பிறந்த பிறகு பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படும். ஏழு மாதத்துக்குப் பிறகு மார்புக் காம்பில் அடிக்கடி கை படக்கூடாது.

மார்பழகும் பாலூட்டுதலும்:
சரியான நிலையில் அமர்ந்து பாலூட்டி பால் கொடுக்கின்ற காலகட்டங்களிலும் தவறாமல் மார்பு அளவுக்கு தகுந்தாற்போல் பிரா அணிந்து வந்தால் மார்பு அழகு கெடாது.
பாலூட்டிக் கொண்டே இருக்கும்போது கருத்தரிப்பு தள்ளிப்போகுமா?
பாலூட்டும் கால கட்டங்களில் ஹார் மோன்களின் சமன்பாடு மாறிவிடுவதால் மாதவிலக்கு சீராக இருக்காது. அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும்.
மார்புக் காம்பில் வெடிப்போ, வீக்கமோ இருக்கும் போது பாலூட்டுவது எப்படி?
இதனால் குழந்தையின் வாயில் கிருமி பாதிப்பினை உருவாக்கிவிடும். ஆரோக்கியமாக உள்ள மற்றொரு மார்பில் பால் கொடுப்பதே நல்லது.
பால் கட்டியிருக்கும் போது என்ன செய்வது?
பால் கட்டியிருக்கும் பகுதியை லேசாக அழுத்தி காம்பு பகுதியை நோக்கி மார்பை மெதுவாக அழுத்தி கெட்டியாகிவிட்ட பாலை வெளியே பீய்ச்சிவிட்டு பிறகு பாலூட்டலாம்.
மார்புக் காம்புகளில் வெடிப்பு இருந்தால், மார்பில் பால் கட்டிக் கொண்டால், தொடர்ந்து இறுக்கமான பிராக்கள் அணிந்து வந்தால் தொற்று நோய்கள் ஏற்படும்.
பால் கட்டியதால் மார்புக் கனமாக இருந்தால் ஒரு துண்டை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து மார்பின் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் கெட்டியாகிவிட்ட பால் கரைந்து நிவாரணம் கிடைக்கும்.

பாலூட்டும் போது வயிற்றுவலி:
குழந்தை காம்பை உறிஞ்சும் போது அந்த செய்தி, காம்பில் உள்ள நரம்புகள் வழியாக மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியை சென்றடைகிறது. உடனே ஆக்ஸிடோஸின் ஹார்மோன் சுரக்கிறது. பாலை வெளிவிடத் தூண்டும் இந்த ஹார்மோன், கர்ப்பப் பையையும் சுருங்கி விரியச் செய்வதால்தான் வயிற்றுப் பகுதியிலிருந்து வலி ஏற்படுகிறது. சிறிது நேரத்திலேயே இது சரியாகிவிடும்.
பாலுட்டத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் சிலருக்கு காம்புகளில் அரிப்பு, வலி எரிச்சல் ஏற்படலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை சரியான கோணத்தில் வைத்துக் கொள்ளாதது. சருமம் மிகவும் உலர்ந்தோ அதிகமான ஈரப்பசையுடன் இருந்தாலோ அதிக அளவு சோப்பு உபயோகிப்போ இதன் காரணமாகலாம்.
குழந்தைக்கு பல் முளைக்கும் பருவத்தில் தாயின் மார்புக் காம்புகளை கடித்துவிடுவதாலும் அவை பாதிக்கப்படலாம்.
குழந்தை பாலை கக்கினால் என்ன செய்ய வேண்டும்?
குடிக்கத் தொடங்கிய உடனே சில குழந்தைகள், தொடர்ச்சியாக கக்கிக் கொண்டே இருந்தால் சிறிது நேரம் விட்டுவிட்டு பிறகு மறுபடியும் கொடுக்கலாம். குழந்தை காம்பை சப்ப சப்பத்தான் தாயின் மார்பில் பால் ஊறும். குழந்தைக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டால் பால் சுரப்பது குறைந்துவிடும்.
மார்பு அளவில் பெரிதாக இருந்தால் பால் நிறைய சுரக்கும். சிறிதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பது தவறான நம்பிக்கை. பால் சுரப்பு என்பது மார்பிலுள்ள பால் சுரப்பிகளின் எண்ணிக்கையைப் பொறுத்த விஷயம். மார்பின் அளவைப் பொறுத்தல்ல.
மார்பகத்தில் பால் கட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு நாளைக்கு எட்டு முறையாவது பாலை வெளியேற்ற வேண்டும். கையினால் பாலை வெளியேற்ற முடியவில்லை என்றால் இதற்கென்றே பம்புகள் மூலம் பாலை வெளியேற்றலாம்.
கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிட்டால் தாய்ப்பால் குறையும். மாத்திரையில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பால் சுரப்பைத் தடை செய்யும். டாக்டரை அணுகினால் இப்படி பால் சுரப்புக் குறைந்துவிடாமல் இருக்க மாத்திரைகள் தருவார்.
*மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் திருமணம் செய்யலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐந்து வருடங்களுக்காவது குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது. அதன்பிறகு குழந்தை பெற்றால் இன்னொரு மார்பகத்தில் தாய்ப் பாலூட்டலாம்.

மார்பகத்திற்கு நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் :-
பெரிய மார்பகத்தை சிறிதாக்குவது. சரிகிற மார்பகத்தை சரியான அளவுக்குக் கொண்டு வருவது சிறிய மார்பகத்தைப் பெரிதாக்குவது போன்றவை.
மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை
சிலிகான் ஜெல் அல்லது சலைன் வாட்டர் நிரப்பிய பை போன்ற ஒன்று மார்பகத்தின் உள்ளே வைக்கப்படும். மார்பகத்தின் கரும் பகுதியில் வெட்டி இதைச் செய்வதால், தழும்பு வெளிப்படையாகத் தெரியாது.

மார்பகத்தை சிறியதாக்கும் அறுவை சிகிச்சை
பெரிய மார்பகம் பலருக்கும் பிரச்சனை தான் தோள்களில், கழுத்தில், முதுகில் வலியை உண்டாக்கும். தோள்பட்டையில் உள்ளாடை அழுத்திக் காயமாகும். மார்பகங்களின் கீழே உராய்ந்து புண்ணாகும். ஒரு பக்கம் மட்டும் சிலருக்கு பெரிதாக இருக்கும். அவர்களும் தாழ்வு மனப்பான்மையில் அவதிப்படுவார்கள்.
மார்பகத்தில் தேவைக்கு அதிகமாக இருக்கின்ற தோல், தசை, கொழுப்பு மூன்றையும் நீக்கிவிட வேண்டும். பிறகு மார்பக நுனிப் பகுதியையும், காம்பு பகுதியையும் அப்படியே எடுத்து மேலே கொண்டுபோய் வைத்துவிட வேண்டும்.

மார்பகக் கட்டிகள்: சதை முடிச்சுகள், நீர்க் கட்டிகள், சீழ் கட்டிகள்.

சதை முடிச்சுகள் :
ஃபைப்ரோ அடினோஸிஸ் : இதைத் தொட்டுப் பார்த்தால் பொடி கற்களும் மண்ணும் போட்டு மூடப்பட்ட துணியைத் தொடுவது மாதிரி நறநறவென்று இருக்கும்.
ஃபைப்பேரா அடினோமோ: சுண்டெலி மாதிரியே அங்கங்கே நகரும். தொடுவதற்கு ரப்பர் மாதிரி இருக்கும். இது ஒன்றாகவோ பல கட்டிகள் சேர்ந்தோ இருக்கலாம். இதனுடைய பிரச்சனையே மார்பகத்தின் வடிவம் அழகாக இருக்காது என்பதுதான்.
ஃபைப்ரோ அடினோஸிஸ்: பொதுவாக பெண்கள் பூப்படையும் பருவத்திலோ மெனோ பாஸ் நிலையிலோ ஏற்படக்கூடியது. மாத விலக்கிற்கு சில நாட்களுக்கு முன் இந்தக் கட்டி பெரிதாகும். அதிக வலி எடுக்கும். இந்த சமயங்களில் கோக், காபி, சாக்லேட், அதிக கொழுப்பு உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதும் நிறைய சோயா சேர்ப்பதும் வலியைக் குறைக்கும்.
* பெரிய ஃபைப்ரோ அடினோமா என்பது பொதுவாக வயதுக்கு வரும் நேரத்தில் ஏற்படுவது.

கொழுப்பு உருண்டை கட்டிகள்: தொட மிருதுவாக, முடிச்சு முடிச்சாக இருக்கும். திடீர் என்று வலி வந்தால் கட்டியின் அளவு பெரிதானாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீர்க்கட்டிகள்: உடலில் உள்ள ஒருவகை நீர்கோத்து கட்டியாவது. இது பொதுவாக அக்குள் பகுதியிலும் அடி மார்புப் பகுதியிலும் ஏற்படுகிறது. வலி இருக்கும். மார்பகம் பெரிதாகும். கட்டி பெரிதாகி வலியும் அதிகரித்தால் கட்டியில் கிருமி பாதிப்பு எனலாம்.
சீழ்க்கட்டிகள் : நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அவை ஏற்படும். சர்க்கரை நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை. சிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கு சீழ் பிடித்து ஏற்படுவதுதான் இந்தக் கட்டிகள்.
எல்லாக் கட்டியுமே புற்றுநோய் அல்ல. எந்தக் கட்டியையும் அலட்சியப்படுத்தவே கூடாது. சிறு முடிச்சாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.